என்.ஜி.எம்.கல்லூரியில் காந்திய சிந்தனை பட்டயப்படிப்பு தொடக்கம்
என்.ஜி.எம். கல்லூரியில் காந்திய சிந்தனை பட்டயப்படிப்பு தொடக்க விழா நடைபெற்ற போது எடுத்த படம். பொள்ளாச்சி, ஜூலை. 20- பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான காந்திய சிந்தனை என்ற பட்டயப்படிப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், காந்திய சிந்தனைகள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை என்று கூறி ஒரு கல்வி நிறுவனம் பட்டயப்படிப்புக்குத் தேவையான பாடத்திட்டங்களை…

