
என்.ஜி.எம். கல்லூரியில் காந்திய சிந்தனை பட்டயப்படிப்பு தொடக்க விழா நடைபெற்ற போது எடுத்த படம்.
பொள்ளாச்சி, ஜூலை. 20-
பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான காந்திய சிந்தனை என்ற பட்டயப்படிப்பு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், காந்திய சிந்தனைகள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை என்று கூறி ஒரு கல்வி நிறுவனம் பட்டயப்படிப்புக்குத் தேவையான பாடத்திட்டங்களை மட்டும் பயிற்றுவித்தால் போதாது. அந்தப் பட்டப்படிப்போடு மனித விழுமியங்களை போதிக்கக் கூடிய காந்திய கொள்கைகள், தத்துவங்கள் போன்றவையையும் கற்பிக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் அத்தகைய கொள்கைகளை தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பழனிதுரை கலந்து கொண்டு பேசினார். முன்னதாக முதன்மையர் முத்துக்கிருஷ்ணன் காந்திய சிந்தனை பாடம் குறித்து பேசினார். விழாவில் இயக்குனர் சரவணபாபு, முதன்மையர் உமாபதி, நிர்வாக மேலாளர் ரகுநந்தன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வரலாற்றுத் துறை மங்கையர்க்கரசி நன்றி கூறினார்.




